எப்போதும் செய்கிற புளியோதரையை இன்னும் சுவையா எல்லாருக்கும் பிடித்த மாதிரி அதுவும் கும்பகோணம் ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளி - 150 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
பெருங்காயம் - 25 கிராம்
கடுகு - 30 கிராம்
வேர்க்கடலை - 150 கிராம்
வெந்தயம் 20 கிராம்
மஞ்சள்தூள் - 100 கிராம்
வெல்லம் - 30 கிராம்
கறிவேப்பிலை - காய்ச்சலுக்கு
காய்ந்த மிளகாய் - 30 கிராம்
உப்பு - சுவைக்க
நல்லெண்ணெய் - 300 மி.லி
வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்து நல்லெண்ணெயை கடாயில் ஊற்றி சூடானவுடன் அதில் மஞ்சளை சேர்த்து மொறுமொறுவென வறுத்து எடுக்கவும். மேலும் எண்ணெயில் பெருங்காயத்தையும் நன்றாக வறுத்து எடுக்க வேண்டும்.
வெந்தயம் மற்றும் வறுத்த மஞ்சள், பெருங்காயத்தை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் எண்ணெயில் விதை நீக்காமல் மிளகாயை உடைத்து போட்டு வறுத்து நிறம் மாறியவுடன் அதில் கடுகு சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் மிளகாய் கருப்பு நிறமாக மாறியவுடன் அதிலேயே உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் அதிலேயே புளி தண்ணீர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறவும். அதில் உப்பு, வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை கிளறிய சிறிது நேரம் கழித்து கருவேப்பிலை சேர்க்கவும். அரைத்த வெந்தயப்பொடி, மஞ்சள்தூள், பெருங்காயம் ஆகியவற்றை கொட்டி நிலக்கடலை சேர்த்து கிளறிவிட வேண்டும்.
மீண்டும் பச்சை கருவேப்பிலை சேர்த்து வதக்கி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். சிறிது நேரம் ஆறவைத்து ஒன்றோடு ஒன்று ஒட்டாத பதத்தில் வடித்த சாதத்தை சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக சிறிது கருவேப்பிலை சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“