கறி கொழம்பு வாசம்... சிக்கன், மட்டன் சாப்பிடாத மக்களுக்கு இந்த குருமா: செஃப் தீனா ரெசிபி
கொங்கு பகுதிகளில் தயார் செய்யப்படும் உணவுகள், இணையத்தில் வரவால் பலராலும் அதிகம் அறியப்பட்டும் தேடப்பட்டும் வருகிறது. உணவுப் பிரியர்களின் தேடலை எளிதாக்க, செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் கோவை ஸ்டைல் தக்காளி குருமாவை பகிர்ந்துள்ளார்.
கோவை ஸ்டைல் தக்காளி குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
கொங்கு பகுதி உணவுகளுக்கு தனி மவுசு உண்டு. அந்த பகுதிகளில் தயார் செய்யப்படும் உணவுகள், இணையத்தில் வரவால் பலராலும் அதிகம் அறியப்பட்டும் தேடப்பட்டும் வருகிறது. உணவுப் பிரியர்களின் தேடலை எளிதாக்க, செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் கோவை ஸ்டைல் தக்காளி குருமாவை பகிர்ந்துள்ளார்.
Advertisment
இந்தக் குருமா சிக்கன், மட்டன் சாப்பிடாத மக்களுக்கு சிறந்ததாக இருக்கும் என்றும், வயதான முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்றும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது. இந்த குருமாவுக்கு சேர்க்கும் மசாலா கூடுதல் சுவையை தருவதாகவும் தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில், கோவை ஸ்டைல் தக்காளி குருமா எப்படி தயார் செய்யலாம் என்று இங்குப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தக்காளி - 3/4 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 4 மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் மல்லித்தூள் - 2 ஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 5 பல் மிளகு- 1/2 ஸ்பூன் சீரகம் - 1/2 ஸ்பூன் சோம்பு - 1 பட்டை - 2 ஏலக்காய் - 1 கிராம்பு- 4 கசகசா - 1/2 ஸ்பூன் தேங்காய் அரை மூடி பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை கொத்தமல்லி எண்ணெய் - 100 மி.லி உப்பு
Advertisment
Advertisements
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும், அதில் சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அதனுடன், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் - 1/2 ஸ்பூன், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா சேர்த்து வதக்கவும்.
இதன்பிறகு, அடுப்பை அனைத்து விட்டு தேங்காய் துருவல் மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து கலந்து விடவும். இதனை நன்கு ஆறவிட்டு மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இதனிடையே, ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து, அது கொதித்து வந்தவுடன் தக்காளியை ஒரு இடத்தில் கீற்று போல வெட்டி சேர்க்கவும். இவை நன்கு வெந்தவுடன் தக்காளியின் தோலை உரித்துக் கொள்ளவும். அதனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இதன்பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். மசாலாவுக்கு தேவையான தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
பிறகு, ஏற்கனவே வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். அதன்பின்னர், மிக்சியில் அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த தக்காளி குருமா ரெடி.