மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் சென்னை ஸ்டைல் சோயா சுக்கா ரெசிபி அசைவ சுவையில் சைவ உணவு பிரியர்களுக்கு ஏற்ற ரெசிபி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மட்டன் சுக்காவுக்கு டஃப் கொடுக்கும் சென்னை ஸ்டைல் சோயா சுக்கா ரெசிபி அசைவ சுவையில் சைவ உணவு பிரியர்களுக்கு ஏற்ற ரெசிபி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சைவ உணவு உண்பவர்களுக்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் சோயாவை வைத்து மட்டன் ஸ்டைலில் சோயா சுக்காவை எப்படி செய்வது என்று செஃப் தீனா ரெசிப்பியில் பார்ப்போம். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் செயல்முறை விளக்கத்துடன் கூறியுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சோயா சங்க்ஸ் வெங்காயம் தக்காளி மிளகாய் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் பச்சை மிளகாய் சீரகத்தூள் மல்லி தூள் கரம் மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு கொத்தமல்லி தழை புதினா இலைகள் கறிவேப்பிலை நட்சத்திர சோம்பு மராத்தி மொக்கு சீரகம் எண்ணெய்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் சோயாவை சுடுதண்ணீரில் ஊற வைத்து கசக்கி தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய், மராத்தி மொக்கு, நட்சத்திர சோம்பு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி போட்டு வேக விட்டதும் புதினா,கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து வதக்கி விடவும்.
அனைத்தும் நன்கு வதங்கி பச்சை வாசம் நீங்கியதும் சோயாவை போட்டு கிளறி விடவும். ஒரு பத்து நிமிடம் வேகவிட்டதும் மேலே கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கினால் சுவையான சோயா சுக்கா ரெடியாகிவிடும்.