Advertisment

கும்பகோணம் ஸ்பெஷல் வத்தக் குழம்பு சாதம்: செஃப் தீனா டேஸ்ட்டி ரெசிபி

டேஸ்டியான வத்தல் குழம்பு சாதம்; கும்பகோணம் ஸ்டைல் ரெசிபியை பகிர்ந்த செஃப் தீனா; உங்க வீட்டில் டிரை பண்ணி பாருங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
deena vatha

சாம்பார் சாதம், தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் என பல வெரைட்டி சாதங்களை நாம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் கும்பகோணத்தில் செய்யப்படும் வத்தக்குழம்பு சாதம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சாதாரணமாக எல்லோரும் வத்தக் குழம்பு ஊற்றி சாப்பிட்டு இருப்போம். ஆனால் வத்தக் குழம்பு சாதம் என முழுமையான உணவை ருசித்து இருக்க மாட்டோம்.

Advertisment

எனவே கும்பகோணம் ஸ்பெஷல் வத்தக் குழம்பு சாதம் எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம். செஃப் தீனா தனது யூடியூப் சேனலில் இந்த டேஸ்ட்டி ரெசிபியை பகிர்ந்துள்ளார்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 கிலோ

சின்ன வெங்காயம் – 200 கிராம்

பூண்டு – 100 கிராம்

புளி – 100 கிராம்

மிளகாய் தூள் – 20 கிராம்

மல்லித் தூள் – 40 கிராம்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கருவடகம் – தேவையான அளவு

குழம்புத்தூள் – தேவையான அளவு

வெல்லம் – 25 கிராம்

கறிவேப்பிலை – தேவையான அளவு

மணத்தக்காளி வத்தல் – 50 கிராம்

நல்லெண்னெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் புளியை 2 மணி நேரம் ஊற வைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஊற வைத்த புளி தண்ணீரில் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உடைந்த வெல்லம், உப்பு, குழம்புத்தூள், தண்ணீர் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடேறிய பின், எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். இதில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம், பூண்டு பாதி வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுத்து எண்ணெய்யில் கருவடகம், இடிச்ச பூண்டு, மணத்தக்காளி வத்தல் சேர்த்து வதக்கி, ஏற்கனவே உள்ள கலவையில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மேலும், பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை, அடுப்பில் வைக்கப்பட்டுள்ள வடித்து வைக்கப்பட்ட சாதத்தில் சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் நல்லெண்னெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் அருமையான வத்தல்குழம்பு சாதம் ரெடி. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment