தீபாவளி நெருங்கிவிட்டது. தீபாவளி என்றாலே பலகாரம் தான். அதிலும் எல்லோருடைய வீடுகளிலும் தவறாமல் இடம்பெறுவது முறுக்கு. இந்த முறுக்கை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக செய்வார்கள். இவற்றில் தனித்தன்மை வாய்ந்தது தேன்குழல் முறுக்கு.
Advertisment
சாதாரணமாக இந்த தேன்குழல் முறுக்கு தேங்காய் பால் சேர்த்து செய்வார்கள். ஆனால் இந்த முறுக்கு சில நாட்களில் சுவை மாறலாம். அதேநேரம், வெண்ணெய் சேர்த்து செய்யும் இந்த ரெசிபியைத் தெரிந்துக் கொண்டால், நீங்களும் உங்கள் வீட்டில் சுவையான தேன்குழல் முறுக்கு செய்யலாம். செஃப் தீனா பகிர்ந்த ரெசிபி இங்கே.
தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு – 1 கிலோ
உளுந்த மாவு – 200 கிராம்
வெண்ணெய் – 100 கிராம்
சீரகம் – 10 கிராம்
உப்பு – 10 கிராம்
பெருங்காயம் – 5-10 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து, காயவைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்தை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுந்த மாவை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். மேலும் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பிசைந்துக் கொள்ள வேண்டும். மாவு கெட்டியாகவும் இல்லாமல், மிகவும் இலகுவாகவும் இல்லாமல், சரியான பக்குவத்தில் இருக்க வேண்டும். அடுத்ததாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி காயவைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மாவை முறுக்கு பிழியும் குழாயில் நிரப்பி முறுக்கு பிழிந்து, எண்ணெய்யில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் டேஸ்டியான தேன்குழல் முறுக்கு தயார்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“