அப்பளம் நொறுக்கி போட்டு வாழையிலையில் ஊற்றி சாப்பிடக்கூடிய ஒரு பாயாசம் அதுவும் கும்பகோணம் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம். செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் இதனை எப்படி செய்வது என்று செய்து காட்டியுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு: 400 கிராம் கடலைப்பருப்பு: 250 கிராம் ஜவ்வரிசி: 200 கிராம் பச்சரிசி: 150 கிராம் ஏலக்காய் பொடி: தேவையான அளவு அச்சு வெல்லம்: 15 கட்டி தேங்காய்: 1 முந்திரி: 150 கிராம் திராட்சை: 100 கிராம் நெய்: தேவையான அளவு
செய்முறை
Advertisment
Advertisements
முதலில், கடாயைச் சூடு செய்யவும். நெய் சேர்க்காமல், பயத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து வறுக்க ஆரம்பிக்கவும். பச்சை வாசனை மாறி, நல்ல மணம் வரும் வரை சுமார் 5 நிமிடங்கள் வறுக்கவும். பருப்பின் நிறம் லேசாக மாறத் தொடங்க வேண்டும், அரிசி வெள்ளையாக இருக்கும்.
வறுத்த பருப்பு மற்றும் அரிசி கலவையுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். பருப்புகள் முழுதாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். அரைக்கத் தேவையில்லை. பருப்பின் ஃபிளேவர் அப்படியே இருக்கும்.
பருப்பு மற்றும் அரிசி கலவை நன்கு வெந்ததும், அச்சு வெல்லத்தைச் சேர்த்து, வெல்லம் கரையும் வரை நன்கு கிளறவும். மற்றொரு கடாயில் நெய் விட்டு, தேங்காயை பல்லு பல்லாக வெட்டிப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதே நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
வெந்த பாயாசக் கலவையுடன் வறுத்த தேங்காய், முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இந்த முறையில் தயாரிக்கப்படும் பாயாசம், அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்துடன் மிகவும் அருமையாக இருக்கும்.