இந்த சீசனில் தாராளமா கிடைக்கும்... முக்கனி வச்சு ஜில்லுன்னு பாயசம்: செஃப் தீனா ரெசிபி
உடலுக்கு நல்லது தரும் பழங்களை வைத்து அதுவும் முக்கனிகளை வைத்து சுவையான கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு பாயாசம் எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
உடலுக்கு நல்லது தரும் பழங்களை வைத்து அதுவும் முக்கனிகளை வைத்து சுவையான கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு பாயாசம் எப்படி செய்வது என்று செஃப் தீனா செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
திருமண வீடுகளில் பரிமாறப்படும் அதே சுவையான முக்கணி பாயாசத்தை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். மா, பலா, வாழை என மூன்று பழங்களின் தனித்துவமான சுவைகளுடன், இந்தப் பாயாசம் எப்படி செய்வது என்று செஃப் தீனா கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 1.5 கிலோ பலாப்பழம் - 1 கிலோ ஏலாச்சி வாழைப்பழம் - 10 பால் - 5 லிட்டர் நெய் முந்திரி உலர் திராட்சை நறுக்கிய பாதாம், பிஸ்தா நாட்டு சர்க்கரை
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், ஒரு அகலமான பாத்திரத்தில் பால் சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், அதை இடைவிடாமல் கிளறி, 5 லிட்டர் பால் 3 லிட்டராக சுண்டும் வரை காய்ச்சவும். இது பாயாசத்திற்கு சரியான கெட்டித்தன்மையைத் தரும்.
பழங்களை தனித்தனியாக அரைக்க வேண்டும். பலாப்பழத்தை கொரகொரப்பாகவும், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்தை மென்மையாகவும் அரைத்துக்கொள்ளவும். பலாப்பழம் கொரகொரப்பாக இருப்பது, பாயாசத்தை சாப்பிடும்போது வாயில் கடிபட்டு தனித்துவமான சுவையை அளிக்கும்.
காய்ச்சிய பால் நன்கு ஆறியதும், அரைத்து வைத்துள்ள பழக் கூழ்களைச் சேர்க்கவும். சூடாக இருக்கும்போது பழங்களைச் சேர்த்தால் நிறமும், சுவையும் மாறலாம் என்பதால், பால் ஆறிய பின்னரே சேர்க்க வேண்டும்.
பிறகு, தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும். பழங்களில் இயற்கையான இனிப்பு இருப்பதால், சர்க்கரையின் அளவை கவனமாகச் சேர்க்கவும்.
கடைசியாக, சிறிதளவு நெய், முந்திரி, உலர் திராட்சை, நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து நன்கு கலந்துவிடவும். நெய்யை நேரடியாகச் சேர்ப்பது பாயாசத்திற்கு தனித்துவமான நறுமணத்தையும் மென்மையையும் தரும்.
இந்த முக்கணி பாயாசத்தை குளிர்ந்த பான கப்புகளில் பரிமாறவும். இதன் சுவை, ஐஸ்கிரீமை மெல்ட் செய்து சாப்பிடுவது போல இருக்கும்.