ஹோட்டல் ஸ்டைலில் சுவையான தேங்காய் சாதம் மற்றும் புளித் துவையல் எப்படி செய்வது செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
இது செய்வதற்கு எளிதாகவும், குறிப்பாக கோடைகாலத்தில் சுவையாகவும் இருக்கும். சமையல் கலைஞர் தீனா கும்பகோணம் சென்று அங்கு செய்வது போலவே தேங்கய் சாதமு புளித்துவையல் ரெசிபியை செய்து காட்டியுள்ளார்.
தேவையான பொருட்கள்:
சமைத்த சாதம் துருவிய தேங்காய் கடுகு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் வேர்க்கடலை பெருங்காயம் உப்பு கொத்தமல்லி இலை கறிவேப்பிலை இஞ்சி சர்க்கரை தேங்காய் எண்ணெய்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வறுக்கவும். பின்னர் வேர்க்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
இதில் துருவிய தேங்காயை சேர்த்து லேசாக பொன்னிறமாக வறுக்கவும். அடுத்ததாக உப்பு, பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும். இதை இறக்கி சமைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறவும். சுவைக்காக கடைசியில் சர்க்கரை கொஞ்சம் சேர்க்கவும். அவ்வளவு தான் சுவையான தேங்காய் சாதம் தயார்.
புளித் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் புளி காய்ந்த மிளகாய் பெருங்காயத்தூள் உப்பு
செய்முறை:
புளித் துவையலுக்கு, தேங்காய், புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். அவ்வளவுதான் சுவையான தேங்காய் சாதத்திற்கு அருமையான புளித்துவையல் தயார்.
தேங்காயை லேசாக வறுப்பதால் அது அதன் இனிப்பை தக்கவைத்துக்கொள்ளவும், ஒட்டாமல் இருக்கவும் உதவும். தேங்காய் எண்ணெய் மற்றும் இஞ்சி சேர்ப்பது செரிமானத்திற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். புளித் துவையல் தேங்காய் சாதத்துடன் இனிப்பு, புளிப்பு மற்றும் காரமான சுவைகளின் கலவையை அளிக்கும்.