சமைக்க நேரம் இல்லாதவர்கள் கூட சுலபமாக சமைக்கும் வகையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. இதற்கு காய்கறி கூட தேவையில்லை. வெறும் வெங்காயத்தை வைத்து எளிமையாக செய்யலாம் என செஃப் தீனா செய்து காட்டியுள்ளார்.
சமைக்க நேரம் இல்லாதவர்கள் கூட சுலபமாக சமைக்கும் வகையில் ஈஸியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி. இதற்கு காய்கறி கூட தேவையில்லை. வெறும் வெங்காயத்தை வைத்து எளிமையாக செய்யலாம் என செஃப் தீனா செய்து காட்டியுள்ளார்.
பாரம்பரிய சுவையில் நாவில் எச்சி ஊறவைக்கும் வெங்காய தொக்கும் அதற்கு காம்பினேஷனாக கொள்ளு பொடியும் எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1/2 kg புளி - 200 g சக்தி மிளகாய்த்தூள் - 200 g பெருங்காயத்தூள் - 25 g வெல்லம் - 100 g உப்பு - 100 g கடுகு - 1 டீஸ்பூன் வெந்தயம் - 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 லிட்டர்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில், வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தமாக உரித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை முழுதாகவும், சிறியதாக நறுக்கியும், அரைத்தும் பயன்படுத்தலாம். (3/4 பங்கு வெங்காயத்தை நைசாக நறுக்கி, மீதியை அரைத்து பயன்படுத்தலாம்).
ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். சுமார் 30% வதங்கியதும், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்க்கவும். புளியை தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை வெங்காயத்துடன் சேர்க்கவும். இது தொக்குக்கு கெட்டித்தன்மையையும், அதிக அளவையும் கொடுக்கும்.
இத்துடன் உப்பு, வெல்லம், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் (தனி மிளகாய்த்தூள்) ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து, தொக்கு கெட்டியாகும் வரை வேகவிடவும். அவ்வப்போது நல்லெண்ணெய் சேர்க்கலாம்.
சுமார் அரை மணி நேரம் மெதுவாக சமைக்க வேண்டும். கடுகு மற்றும் வெந்தயத்தை தனித்தனியாக வறுத்து பொடி செய்து, தொக்கு கெட்டியானதும் அதன் மேல் தூவி நன்கு கலக்கவும்.
கொள்ளு பொடி - தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 மடங்கு உளுந்து (தோலுடன் கூடிய கருப்பு உளுந்து சிறந்தது) - 1.5 மடங்கு
கொள்ளு பொடி செய்முறை:
உளுந்தை (தோலுடன் கூடிய கருப்பு உளுந்து சிறந்தது) நன்கு வறுத்து தனியே எடுக்கவும். அதே கடாயில் கொள்ளை வறுக்கவும். வறுத்த உளுந்து மற்றும் கொள்ளு இரண்டையும் சேர்த்து 90-95% நைசாக அரைத்து பொடி செய்யவும்.
சூடான சாதத்தில் கொள்ளு பொடி, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது நல்லெண்ணெய் அல்லது தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும். இந்த பிசைந்த சாதத்துடன் வெங்காய தொக்கை தொட்டு சாப்பிடவும். இது ஒரு தனித்துவமான சுவையையும் அனுபவத்தையும் கொடுக்கும்.
இந்த வெங்காய தொக்கு கஞ்சி, சாதம், தயிர் சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் ஏற்றது. கொள்ளு பொடியுடன் சாதம் பிசைந்து சாப்பிடுவது கிராமத்து பாரம்பரிய சுவையை நினைவூட்டும்.