எப்போதும் போல் இல்லாமல் கொஞ்சம் டிப்ரண்டாக பொறிச்சு கொட்டுன குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுகுறித்து செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1 கப் தக்காளி - 2 (நறுக்கியது) சிறிய வெங்காயம் - 20 காய்ந்த சிவப்பு மிளகாய் - 6 பச்சை மிளகாய் - 2 பூண்டு - 6 பல் மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன் சீரகம் - ½ டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் - ½ டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு புளி - சிறிய நெல்லிக்காய் அளவு கறிவேப்பிலை - 2 கொத்து பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
துவரம் பருப்பை நன்றாகக் கழுவி, மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து குக்கரில் அல்லது பாத்திரத்தில் நன்கு வேக வைக்கவும். பருப்பு நன்றாக மசிய வேண்டும். வெந்த பருப்பை கரண்டியால் அல்லது மத்து கொண்டு லேசாக மசித்து தனியாக வைக்கவும்.
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எள் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கொத்தமல்லி விதைகளையும் சீரகத்தையும் முழுதாக சேர்க்காமல் லேசாக நசுக்கி எண்ணெயில் போடவும். நசுக்கிய கொத்தமல்லி, சீரகம் பொரிந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து லேசாக வதக்கவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும். விருப்பப்பட்டால் பச்சை மிளகாயையும் சேர்க்கலாம். நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வறுத்த மற்றும் பொடித்த பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். வேகவைத்து மசித்த பருப்பை புளித்தண்ணீருடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொதிக்க விடவும். குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
சுவையான பொரிச்ச கொத்துனா பருப்பு குழம்பு இப்போது தயாராக உள்ளது. இதனை சூடான சாதம், இட்லி, தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.