இட்லி, தோசைக்கு இனி சைடிஷ் தேட வேணாம்... இந்த 5 பொருள் போதும்; அட்டகாசமான பொடி ரெடி: செஃப் தீனா ரெசிபி
இட்லி தோசைக்கு ஒரே மாதிரி பொடி சாப்பிடுகிறீர்களா? அப்போ அதை தவிர்த்து விடுங்கள். செஃப் தீனா வெறும் 5 பொருள் வைத்து தயார் செய்யக்கூடிய ஒரு பொடியை பற்றி கூறுகிறார்.
இட்லி தோசைக்கு ஒரே மாதிரி பொடி சாப்பிடுகிறீர்களா? அப்போ அதை தவிர்த்து விடுங்கள். செஃப் தீனா வெறும் 5 பொருள் வைத்து தயார் செய்யக்கூடிய ஒரு பொடியை பற்றி கூறுகிறார்.
வெறும் 5 பொருட்களை வைத்து சுவையான இட்லி பொடி எப்படி செய்வது என்று செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். இதனை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 1/2 கிலோ உளுத்தம் பருப்பு - 6 கிலோ கடலை பருப்பு - 2 கிலோ பெருங்காயம் - 100 கிராம் எண்ணெய் - 2 லிட்டர்
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு அகலமாக கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாயை வறுத்து எடுத்து வைக்கவும். பின்னர் பெருங்காயத்தை வறுத்து எடுத்து கொள்ளவும். இப்போது உளுந்து, கடலை பருப்பு வறுக்கவும். அடுத்ததாக வறுத்த மிளகாய் கொஞ்சம் இதில் சேர்த்து வறுத்து ஆறவைக்கவும்.
அனைத்தும் ஆறி எண்ணெய் இல்லாமல் காய்ந்ததும் இதனை அரைத்துக் கொள்ளலாம். கொரகொரப்பாக அல்லது மிருதுவாக அரைத்து ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.