விலை கம்மியா இருக்கும்போதே தக்காளி வாங்கி சுவையான தக்காளி தொக்கு செய்து சாப்பிடுங்கள். இன்னும் சுவையாக தக்காளி தொக்கு செய்ய செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
தக்காளி - 3/4 கிலோ வெங்காயம் - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 100 கிராம் இஞ்சி - ஒரு சிறிய துண்டு பூண்டு - 5 பல் மிளகு - 1/2 டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் பட்டை - 2 துண்டு ஏலக்காய் - 1 கிராம்பு - 4 எண்ணிக்கை காசா கசா - 1/2 டீஸ்பூன் துருவிய தேங்காய் - 1/2 ஓடு வறுத்த கடலை - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - தேவையான அளவு கொத்தமல்லி தழை - தேவையான அளவு எண்ணெய் - 100 மில்லி உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். இதில் சோம்பு, மிளகு, சீரகம், கசகசா, ஏலக்காய், பட்டை, கிராம்பு போன்ற மசாலாக்களை போட்டு எண்ணெயில் வறுக்க வேண்டும்.
ஒரு இரண்டு நிமிடம் இவற்றை நன்றாக வதக்கிய பின்னர் இதிலேயே துருவிய தேங்காய், பொட்டுக்கடலை சிறிது சேர்த்து வறுக்கவும். இவற்றை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். அடுத்ததாக தக்காளியை கொதிக்க வைத்து தோல் உரித்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி கொத்தமல்லி, கருவேப்பிலை, பச்சை மிளகாய் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து விடவும். மிதமான சூட்டில் வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் தக்காளி மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
பின்னர் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு பார்த்து கொதிவிட்டு இறக்கினால் சுவையான தக்காளி தொக்கு ரெடி ஆகிவிடும்.