கோயில் பிரசாதம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அப்படி அனைவருக்கும் பிடித்த கோயில் பிரசாதங்களில் ஒன்றான திருச்செந்தூர் கோயில் திருபாகம் வெறும் 6 பொருட்களை வைத்து செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 கப்
பால் - 1 கப்
நெய் - 1 கப்
சர்க்கரை - 2 2/1 கப்
முந்திரி பொடி - 1 கப்
குங்குமப்பூ - 1/4 கிராம்
செய்முறை
ஒரு அகலமான அடி கனமான பாத்திரத்தை எடுத்து அதில் குங்குமப்பூ, கடலை மாவு, சர்க்கரை,பால் இவற்றை சேர்த்து கட்டி விழாமல் கிளற வேண்டும். முன்னரே மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பை பொடி செய்து வைக்கவும்.
அடுப்பில் உள்ள கடலை மாவி கட்டி விழாமல் கலண்டு அதில் இந்த முந்திரி தூளையும் சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து கிளறி விடவும்.
மிதமான தீயில் வைத்து கட்டி விழாமல் கிளற வேண்டும். நெய்யை அவ்வப்போது இரண்டு ஸ்பூன் சேர்த்து கிளறலாம்.
திருச்செந்தூர் பிரசாதம் திருபாகம் | Thirupagam Recipe in Tamil | CDK 1448 | Chef Deena's Kitchen
இந்த கடலை மாவு கெட்டியாகி அல்வா பதம் வரும்போது மேலே சிறிது நெய் ஊற்றி இறக்கினால் மண மணக்கும் திருபாகம் ரெடியாகிவிடும். மிகவும் குறைந்த நேரத்தில் அருமையான சுவையில் திருச்செந்தூர் பிரசாதம் திருபாகம் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“