கும்பகோணம் ஸ்டைலில் வெங்காயம் இல்லாமல் மொறு மொறுன்னு செஃப் தீனா ஸ்டைலில் உளுந்தவடை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுகுறித்து செஃப் தீனா கும்பகோணம் சென்று அங்குள்ள சமையல் கலைஞர்களிடன் பேசி வடை சுட்ட வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ பச்சை மிளகாய் - 2 நறுக்கிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கேரட் - 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு - தேவையான அளவு கொத்தமல்லி தழை கறிவேப்பிலை மிளகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1 டீஸ்பூன் உப்பு எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
உளுத்தம் பருப்பை ஒரு 20 முதல் 25 நிமிடம் ஊற வைத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். இந்த மாவு பதம் தண்ணீரில் போட்டால் கரையாமல் மேலே மிதக்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் இந்த மாவுடன் அரிசி மாவு, பெருங்காயத்தூள், கேரட், மிளகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு அடித்து கலந்து கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் அதில் இந்த உளுந்த மாவை உருட்டி வடை போட்டு எடுத்தால் சுவையான மொறு மொறுன்னு வடை ரெடியாகிவிடும். இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவந்து வரும் வரை வடையை வேகவிட்டு எடுக்க வேண்டும்.