தென்னிந்தியாவின் பிரபலமான உணவு வகைகளில் சட்னியும் ஒன்று. பல்வேறு வகையான சட்னிகள் இருந்தாலும், தனித்துவமான சுவையுடன் அனைவரையும் கவரும் வண்டிக்கார சட்னி செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்வது என்று அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி என பல உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஏற்ற இந்தச் சட்னி, 2 முதல் 3 நாட்கள் வரை கெட்டுப்போகாது.
Advertisment
தேவையான பொருட்கள்:
உளுந்து - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 1 கிலோ பூண்டு - 10-15 பற்கள் கடுகு - 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயக்கட்டி - 3 துண்டுகள் காய்ந்த மிளகாய் - 20-25 (குண்டு மிளகாய் என்றால் 15-20) புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு வெல்லம் - 2 சிட்டிகை உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - ஒரு கொத்து நல்லெண்ணெய் - 150 மில்லி
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயக்கட்டி சேர்த்துப் பொரிய விடவும். பெருங்காயக்கட்டி பொரிந்ததும், உளுத்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். உளுந்து 70% வதங்கிய பிறகு, பூண்டு சேர்த்து 100% வதங்கும் வரை தொடர்ந்து வறுத்து, அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
காய்ந்த மிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு, 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து தனியாக எடுத்து வைக்கவும். வறுத்த உளுந்து கலவை ஆறியதும், அதனுடன் ஊறவைத்த காய்ந்த மிளகாய், புளி, தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு சிட்டிகை வெல்லம் சேர்த்து, மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும். வதங்கிய வெங்காயத்துடன் அரைத்து வைத்த சட்னி விழுதைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். சட்னி கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும். அவ்வளவு தான் சுவையான வண்டிக்கார சட்னி தயார்.