சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
அப்படி புதுவிதமாக சமைக்கனுமா அப்போ சட்னியில் இருந்து ஆரம்பியுங்கள் கெட்டு போகாமல் சுவையாக ஒரு நாள் முழுக்க தாங்கும் அளவிற்கு ஒரு சட்னி எப்படி செய்வது என்று ஹோம் குக்கிங் தமிழ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
வெங்காயம் தக்காளி உளுந்து பருப்பு கடுகு உலர்ந்த சிவப்பு மிளகாய் சீரகம் கறிவேப்பிலை புதினா பூண்டு உப்பு எண்ணெய்
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். பின்னர் நிறம் மாறியதும் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, பெரிய வெங்காயம் ஆகியவற்றை வதக்கவும்.
அடுத்ததாக அதில் புதினா, தக்காளி சேர்த்து உப்பு போட்டு வேக விடவும். தக்காளி நன்கு மசிந்து வந்ததும் ஆரவைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்..
இப்போது இதனை தாளிப்பதற்காக எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சட்னியில் கொட்டி கிளறினால் சுவையாக இருக்கும். இந்த சட்னியை இட்லி தோசைக்கு வைத்து சாப்பிடலாம்.