மிருதுவான இட்லிகளைச் செய்ய, மாவு தயாரிப்பில் சில முக்கிய ரகசியங்கள் உள்ளன. பலரும் இட்லி மாவு தயாரிக்கும்போது செய்யும் சில பொதுவான தவறுகளை பற்றி செஃப் சுந்தர் ரெசிபி செக்கர் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இட்லி கல் மாதிரி வருகிறது என்பவர்கள் எல்லாம் இந்த முறையை பின்பற்றுங்கள்.
Advertisment
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி உளுத்தம் பருப்பு
செய்முறை:
Advertisment
Advertisements
மென்மையான, பஞ்சு போன்ற இட்லிக்கு மிக முக்கியமான விஷயம், இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பின் சரியான விகிதம்தான். பலர் 4:1 என்ற விகிதத்தைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் உண்மையில் 5:1 என்பதே சரியான விகிதம். இது இட்லிக்கு மென்மை தரும். அதனால் இந்த அளவை கவனமாக எடுத்துப் பயன்படுத்தவும்.
அடுத்து, பொருட்களின் தரம் மிக முக்கியம். நல்ல தரமான இட்லி அரிசி மற்றும் உளுத்தம் பருப்பைப் பயன்படுத்துவது அவசியம். அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் குறிப்பிட்ட நேரம் ஊறவைப்பதும் முக்கியம். இதன் பிறகு, இரண்டையும் தனித்தனியாக அரைக்க வேண்டும். உளுந்தை மிருதுவாகவும், அரிசியை சற்று கரகரப்பாகவும் அரைப்பது, இட்லிக்கு சரியான அமைப்பைக் கொடுக்கும். அதனால் நல்ல பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
மாவு புளிக்கும் செயல்முறைக்குச் சரியான வெப்பநிலை அவசியம். செயற்கை முறைகளைத் தவிர்த்து, மாவு இயற்கையாகப் புளிக்க அனுமதிப்பது அவசியம். மாவு புளித்த பிறகு, சரியான நேரத்தில் உப்பு சேர்ப்பதும் முக்கியம். ஏனெனில், தவறான நேரத்தில் உப்பு சேர்ப்பது, மாவு புளிக்கும் தன்மையைப் பாதித்து, இட்லிகள் கடினமாகிவிடும். அதனால் மாவு புளிக்க வைப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இறுதியாக, இட்லிகளை வேகவைப்பதில் கவனம் தேவை. சரியான முறையில் வேகவைக்கும்போதுதான், இட்லிகள் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றி, நீங்களும் பஞ்சு போன்ற மென்மையான இட்லிகளைத் தயாரிக்கலாம். சிலர் வீடுகளில் இட்லி சுட்டால் கல் மாதிரி இருக்கிறது என்பார்கள், அதேபோல மாவுக்கு அளவு தெரியாமல் அரைக்காமல் கடையில் வாங்குவார்கள். அவர்கள் எல்லாம் இந்த முறையை பின்பற்றி இட்லி மாவு தயார் செய்து இட்லி தயாரிக்கலாம்.