குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் ரெஸிபி. செஃப் வெங்கடேஷ் பட் அப்பா கடை ஸ்பெஷல் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்த மாதிரி ஒரு ஸ்நாக்ஸ் ரெஸிபி. செஃப் வெங்கடேஷ் பட் அப்பா கடை ஸ்பெஷல் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செப் வெங்கடேஷ் பட் அப்பா கடையில் கிடைக்கும் ஈவ்னிங் காய்கறி ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டி இருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
சம்மர் ஹாலிடேசில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் சரி ஈவ்னிங் டீயோடு சேர்த்து சாப்பிடவும் இந்த காய்கறி ஆம்லேட் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் கடுகு சீரகம் உளுந்து முந்திரி பருப்பு பூண்டு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய பீன்ஸ் பொடியாக நறுக்கிய கேரட் பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு பொடியாக நறுக்கிய காலிபிளவர் வேக வைத்த பச்சை பட்டாணி பொடியாக நறுக்கிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் மிளகாய் தூள் உப்பு பெருங்காயம் வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கு கடலை மாவு அரிசி மாவு ஓமம்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து ஒரு மொறுப்பாக பொறிக்கவும். பின்னர் முந்திரி பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றையும் வதக்கவும். இதில் வேக வைத்த பச்சை பட்டாணியையும் சேர்த்து வதக்கவும். இது நன்கு வேகுவதற்காக சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து மசித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். தண்ணீர் ஊற்றி அது நன்கு வெந்து வந்ததும் அதில் வேகவைத்து தோலுரித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு மசித்து விடவும்.
அடுத்ததாக வேகவைத்து வைத்துள்ள காய்கறிகளையும் அதில் சேர்த்து நன்கு மசித்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு பவுலில் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயம், ஓமம், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைந்து வந்ததும் இந்த காய்கறிகளை உருண்டை பிடித்து மாவில் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் காய்கறிகள் ஆம்லெட் ரெடி ஆகிவிடும்.