மிகவும் பிரபலமான தேங்காய் திரட்டி பால் ரெசிபி செய்வது பற்றி செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார். தேங்காய் திரட்டி பால் அல்வா போல் இருக்கும்.
தேங்காய் - 1 கப்
வெல்லம் - முக்கால் கப்
பயத்தம் பருப்பு
நெய்
முந்திரி
ஏலக்காய் பொடி
அடுப்பில் கடாய் வைத்து பயத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும். வறுத்த பின் மிக்ஸி ஜார் எடுத்து துருவிய தேங்காய், வறுத்த பயத்தம் பருப்பு போட்டு அரைக்கவும். அடுத்த அதில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது அதே கடாயில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
இதன் பின் அதே நெய்யில் தேங்காய், வறுத்த பயத்தம் பருப்பு பேஸ்ட் போட்டு வெல்லம் சேர்த்து கலந்து விடவும். அதன் பின் கெட்டியாக வர அரிசி மாவு சேர்க்கவும். அடிபிடிக்காமல் கிளறவும். அல்வா பதத்திற்கு வரவும். சிறிது நேரம் கழித்து ஏலக்காய் பொடி சேர்க்கவும். நன்கு கெட்டியாக வந்ததும் மேலும் 1 ஸ்பூன் நெய் சேர்க்கவும். அதன் பின் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் டேஸ்டியான திரட்டி பால் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“