அரை கப் பால்; 4 கப் தண்ணீர்... குக்கரில் டேஸ்ட்டி சர்க்கரை பொங்கல் இப்படி பண்ணுங்க: வெங்கடேஷ் பட் ரெசிபி

செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் டேஸ்ட்டி சர்க்கரை பொங்கல் வைப்பது பற்றி பார்ப்போம்.

செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் டேஸ்ட்டி சர்க்கரை பொங்கல் வைப்பது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
sweet pong

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜன.14-ம் தேதி உற்சாகமாக கொண்டப்பட உள்ளது. வீடுகளில் பொங்கல் வைத்து  படையல் இட்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில்  டேஸ்ட்டி சர்க்கரை பொங்கல் வைப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

பச்சரிசி
பாசிப் பருப்பு
நெய் 
பால்
தண்ணீர்
வெல்லம்
லவங்கம்
முந்திரி

செய்முறை

குக்கரில் பச்சரிசி, பாசிப் பருப்பு போட்டு முதலில் நன்கு கழுவ வேண்டும். அதன் பின் அதில் நெய் சேர்க்கவும். அரிசி,பருப்பு எடுத்த அதே கப்பில் அரை கப் பால், 4 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.  சர்க்கரை பொங்கல் குலைந்து இருப்பது தான் டேஸ்டியாக இருக்கும். இப்போது குக்கரை மூடி அடுப்பில் வைத்து 6 விசில் விடவும். 

Advertisment
Advertisements

இடையில் வெல்ல பாகு தயார் செய்ய 2 கப் வெல்லம் எடுக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதி வந்ததும் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் பதம் வந்ததும் அதை ஒரு வடிகட்டி வைத்து வடிக்கவும். பின்னர் அதை மீண்டும் ஒருமுறை 1 கம்பி பதத்திற்கு காய்ச்சி எடுக்கவும். அடுத்தாக, அரிசி, பருப்பை வெந்து ஆகி விடும். அதை கிளிறி விட்டு இறக்கவும். 

மற்றொரு கடாய் எடுத்து நெய் ஊற்றி லவங்கம், முந்திரி சேர்த்து வேக வைத்த அரிசி, பருப்பை சேர்க்கவும். அதன் பின் வெல்ல பாகையும் சேர்த்து விடவும். வெந்து வரும் போது சிறிதளவு ஜாதி காய் சேர்க்கவும். அதன் பின் சிறிதளவு உப்பும் சேர்க்கவும். கடைசியாக பொங்கல் வெந்து இறக்கும்போது திராட்டை வறுத்து சேர்த்து விடவும். அவ்வளவு தான் சர்க்கரை பொங்கல் ரெடி. 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: