கடலை மாவு- அரிசி மாவு விகிதம் முக்கியம்: வெங்கடேஷ் பட் ஆனியன் பக்கோடா ரகசியம் இதுதான்!

கொஞ்சம் பெருங்காயம், சோம்பு சேர்த்து கடலை மாவில் அரிசி மாவை சரியான அளவில் சேர்த்தால் சுவையான வெங்காய பக்கோடா ரெடி; செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி இங்கே

கொஞ்சம் பெருங்காயம், சோம்பு சேர்த்து கடலை மாவில் அரிசி மாவை சரியான அளவில் சேர்த்தால் சுவையான வெங்காய பக்கோடா ரெடி; செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி இங்கே

author-image
WebDesk
New Update
சச

ஆனியன் பக்கோடா டேஸ்டியான மாலை நேர ஸ்நாக்ஸ். ஆனால் சரியாக செய்யாவிட்டால், மொத்தமும் வீணாகிவிடும். ஆனால் கடலை மாவு மற்றும் அரிசி மாவை சரியான விகிதத்தில் கலந்தால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும் சுவையான பக்கோடாவை தயார் செய்யலாம். இதற்கு செஃப் வெங்கடேஷ் பட் பகிர்ந்த ஆனியன் பக்கோடா ரெசிபியை இப்போது பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 250 கிராம்

பூண்டு – 50 

Advertisment
Advertisements

பச்சை மிளகாய் – 4 

சோம்பு – ½ டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – ½ டேபிள் ஸ்பூன்

வனஸ்பதி – 1½ டேபிள் ஸ்பூன்

கடலை மாவு – 150 கிராம்

அரிசி மாவு – 50 கிராம்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

முதலில் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை தனித்தனியாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தில் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.

இதனுடன் மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, அரிசி மாவு, கடலை மாவு, பெருங்காயம், சோம்பு, வனஸ்பதி ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பக்கோடா பக்குவத்திற்கு மிக்ஸ் செய்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை 5 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பின்னர் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், பக்கோடா மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான பக்கோடா ரெடி. உங்கள் குடும்பத்தின் மாலை நேரத்தை இந்த பக்கோடா உடன் மகிழ்ச்சியாக்குங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Food Food Recipes

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: