மீந்து போன பழைய சாதம் இருக்கா? இப்படி அரைச்சு மொறு மொறு தோசை: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
மீதமான பழைய சாதத்தில் இருந்து எவ்வாறு மொறு மொறு தோசை சுடலாம் என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம். இந்த ரெசிபியை சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
மீதமான பழைய சாதத்தில் இருந்து எவ்வாறு மொறு மொறு தோசை சுடலாம் என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம். இந்த ரெசிபியை சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் குறிப்பிட்டுள்ளார்.
சாதம் மீதமானால் அதனை என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைபவரா நீங்கள்? அப்படியென்றால், இந்த சமையல் குறிப்பு உங்களுக்கு தான். மீதமான சாதத்தில் இருந்து எவ்வாறு சுவையான மொறு மொறு தோசை சுடலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம், தண்ணீர், அரிசி மாவு, இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பேக்கிங் சோடா, உப்பு, தயிர், சீரகம்.
செய்முறை:
Advertisment
Advertisements
250 கிராம் வடித்த சாதத்தை எடுத்து, முக்கால் கிளாஸ் தண்ணீர் சேர்த்து, மை போல அரைக்க வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால், மேலும் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் ஒரு கரண்டி அரிசி மாவு, பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இந்த கலவையுடன் 150 கிராம் தயிர் சேர்த்து, கைகளால் நன்கு கலக்க வேண்டும். குறிப்பாக, இந்தக் கலவை தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இந்த மாவை 10 நிமிடங்கள் புளிக்க விட வேண்டும். தோசை ஊற்றுவதற்கு முன்பு மாவில் அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கலாம்.
இனி, தோசைக் கல்லை சூடாக்கி, சிறிது எண்ணெய் தடவி, மாவை ஊத்தப்பம் போல ஊற்ற வேண்டும். மேலும், தோசையின் மேல் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் ரெசிபி ரெடியாகி விடும்.