ஹைதரபாத் ஸ்டைலில் தம் போட்டு காய்கறி பிரியாணி எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி காய்கறிகள் பட்டை வெள்ளை மிளகு தூள் புதிய கிரீம் எண்ணெய் உப்பு தண்ணீர்
செய்முறை:
Advertisment
Advertisements
முதலில் அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின்னர், பட்டை சேர்த்து லேசாக வறுக்கவும். நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, அவற்றின் பச்சை வாசனை முழுவதுமாக நீங்கும் வரை நன்கு வதக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், வெள்ளை மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
அடுத்து, கழுவிய பாஸ்மதி அரிசியை பாத்திரத்தில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர், அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பாத்திரத்தை மூடி, குறைந்த தீயில் அரிசி முழுமையாக வெந்து, தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். பின்னர் எப்போதும் போல வெயிட் வைத்து தம் போட வேண்டும்.
சுவையான மற்றும் நறுமணமான இந்த காய்கறி பிரியாணி தயாரானதும், பரிமாறும் முன் அதன் மேல் சிறிதளவு புதிய கிரீம் மற்றும் மிளகு தூள் தூவி பரிமாறலாம்.