கோயில் பிரசாதம் என்றாலே சுவை தான். ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்காது. அதுவும் ஐயப்பன் கோயில் அரவனா பாயாசம் சாப்பிடுவது என்பது கிடைக்காத ஒன்றுதான்.
அப்படிப்பட்ட ஐயப்பன் பிரசாதமான அரவனா பாயாசத்தை வீட்டிலேயே செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கேரளா சிவப்பு அரிசி
நெய்
ஏலக்காய் பொடி
சுக்கு பொடி
துருவிய தேங்காய்
முந்திரி
நாட்டுச்சர்க்கரை
செய்முறை
250 கிராம் கேரளா சிவப்பு அரிசியை நன்கு கழுவி குறைந்தது ஒரு ஆறு மணி நேரம் ஆவது இதனை ஊற வைக்க வேண்டும். ஊறிய அரிசியை எடுத்து குக்கரில் சேர்த்து ஒன்றே கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி எட்டு விசில் விட்டு குக்கரை இறக்கி விட வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் நெய் ஊற்றி துருவிய தேங்காய் சேர்த்து வறுக்கவும். நல்ல சிவந்து வந்தது வரும் வரை தேங்காயை நெய்யில் வறுக்கவும். பின்னர் அதில் உடைத்த முந்திரி பருப்பையும் சேர்த்து சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும்.
முந்திரிப் பருப்பு தேங்காய் இரண்டும் சிவந்து வந்ததும் நெய்யில் இருந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதே நிலையில் நெய்யில் நாட்டுச் சர்க்கரை பொடியை சேர்த்து கரைக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள அரிசி சேர்த்து சுக்குத்தூள், ஏலக்காய் தூள் இரண்டையும் சேர்த்து கலந்து விடவும்.
இது நன்கு கொதிக்கும் போது வறுத்து வைத்துள்ள தேங்காய் மற்றும் முந்திரி பருப்பையும் அதில் சேர்த்து கலந்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக இது அடி பிடிக்காமல் கலந்து விட வேண்டும்.
Aravana Payasam | Pongal sweets | Chef Venkatesh Bhat
பின்னர் தண்ணீர் எல்லாம் வற்றி நெய், சாதம் இவை அனைத்தும் நன்கு கலந்து கெட்டியான பதத்தில் வரும் போது மீண்டும் நெய் சேர்த்து கலந்து விடவும். இவை கெட்டியானதும் அதை இறக்கினால் சுவையான அரவனா பாயாசம் ரெடி ஆகிவிடும்.