இட்லி தோசைக்கெல்லாம் சைடிஷ்ஷா இருக்கக்கூடிய ஒரு டிஷ். அதுவும் கேரளா சைடு ஸ்டைல் சைடிஷ் எப்பவுமே நல்லாத்தான் இருக்கும். அப்படி கேரளாவில் மிகவும் ஃபேமஸ்ஸா இருக்கக்கூடிய இஞ்சி புளி நம்ம வீட்டிலேயே எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் அவரது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
இஞ்சி புளித்தண்ணீர் நாட்டு சக்கரை தேங்காய் எண்ணெய் குண்டு மிளகாய் கடுகு பச்சை மிளகாய் கருவேப்பிலை மிளகாய் தூள் மஞ்சள் தூள் பெருங்காயம் உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
முதலில் இஞ்சியை எடுத்து தோல் நீக்கி கழுவிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கி மிக்ஸியில் சிறிதாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் குண்டு மிளகாய், கடுகு சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் இதில் நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து எண்ணெயில் வதக்கவும். இது நல்ல நிறம் மாறி மணம் மாறி வந்ததும் அதில் நறுக்கிய இஞ்சியையும் சேர்த்து எண்ணெயிலேயே வறுக்க விடவும்.
இவை நன்கு வறுபட்டு வந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் சிறிது நாட்டுச் சர்க்கரை மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். ஒரு ஐந்து முதல் ஆறு நிமிடம் தேக விடவும் வேகும் போது அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நன்கு வெந்து திக்காக ஒரு பேஸ்ட் மாதிரி வரும் அப்போதே இதனை எடுத்து ஆறவைத்து ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
எப்போது வேண்டுமானாலும் இதை இட்லி தோசைக்கோ இல்ல சாப்பாட்டிற்கோ வைத்து சாப்பிடலாம்.