கடவுள் தந்த வரம்... சுட்டெரிக்கும் வெயிலுக்கு இந்தக் கீரையில் ரசம்: செஃப் வெங்கடேஷ் பட் சொல்லும் டிப்ஸ்
சுட்டெரிக்கும் வெயிலில் உடலை குளிர்விக்க மணத்தக்காளி கீரையில் ரசம் வைத்து சாப்பிடுங்கள். அதுவும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
சுட்டெரிக்கும் வெயிலில் உடலை குளிர்விக்க மணத்தக்காளி கீரையில் ரசம் வைத்து சாப்பிடுங்கள். அதுவும் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த நாட்களில், உடலைக் குளிர்வித்து, புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு பாரம்பரிய உணவுதான் மணத்தக்காளி கீரை ரசம். வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் மணத்தக்காளி கீரை ரசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். வெறும் சுவையானதாக மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. குறிப்பாக, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் தன்மை மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மணத்தக்காளி கீரை ரசத்தில் நிறைந்துள்ளன.
Advertisment
தேவையான பொருட்கள்:
கருப்பு மிளகு: 1 தேக்கரண்டி சீரகம்: 1 ½ தேக்கரண்டி கடுகு: 1 தேக்கரண்டி எண்ணெய்: 2 தேக்கரண்டி வெந்தயம்: ¼ தேக்கரண்டி வரமிளகாய்: 4 முதல் 5 தக்காளி: 1 மணத்தக்காளி கீரை: 1 கட்டு அரிசி கழுவிய தண்ணீர்: 300 முதல் 350 மில்லி மஞ்சள் தூள்: ¼ தேக்கரண்டி உப்பு: தேவையான அளவு மேலே வறுத்த பொடி: 1 தேக்கரண்டி பெருங்காயம்: ¼ தேக்கரண்டி தேங்காய் பால்: 150 மில்லி
செய்முறை:
Advertisment
Advertisements
ஒரு சிறிய கடாயில் கருப்பு மிளகு, சீரகம், கடுகு ஆகியவற்றை வாசனை வரும் வரை வறுக்கவும். பொடி செய்தல்: வறுத்த மசாலாப் பொருட்களை ஒரு மிக்சியில் போட்டு பொடி செய்யவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். மணத்தக்காளி கீரையைச் சேர்த்து, தக்காளி மற்றும் தாளிப்புடன் கலக்கவும். அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி கிளறவும். மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் தேவையான அளவு உப்பு, பொடித்து வைத்துள்ள மசாலாப் பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும். அடுத்து பெருங்காயம் சேர்த்து கிளறவும். சுவைக்கு தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலந்து ரசத்தை சுமார் 10 வினாடிகள் கொதிக்க விடவும்.
அவ்வளவு தான் கொதி வந்ததும் சுவையான மணத்தக்காளி கீரை ரசம் பரிமாறத் தயார். மணத்தக்காளி கீரைக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உடல் உஷ்ணத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வீட்டு மருந்தாகும். கோடை காலங்களில் வாரத்திற்கு இரண்டு முறையாவது இந்த ரசத்தை உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.