தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக பாசிப்பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். பாயாசங்களில் நிறைய வகைகள் உள்ளது. ஆனால் இந்த பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் எளிமையாக விரைவில் செய்து விடலாம் என்றும் அதனை எப்படி செய்வது என்றும் செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
தேவையான பொருட்கள்
நெய் தேங்காய் சில்லு முந்திரி திராட்சை வெல்லம் பாசிபருப்பு பச்சை கற்பூரம்
செய்முறை
Advertisment
Advertisements
படையலுக்கு வைக்கும்படி சுவையான பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்று பார்ப்போம். அதற்கு ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பாசிப்பருப்பு போட்டு வதக்கவும். பச்சை வாசனை நீங்கி நல்ல வாசனை வரும் போது அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடலாம் அல்லது குக்கரில் வைத்து வேகவிடலாம்.
ஒரு 15 நிமிடத்திலேயே இது முக்கால் வேக்காடு வந்ததும் அதை இறக்கி வைக்கவும். பின்னர் வேறு ஒரு கடாயில் நெய் சேர்த்து அது நறுக்கிய தேங்காய் முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து சுத்தமான நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லத்தை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். தனியாக வெல்லத்தை வாங்கி பொடித்து வெல்ல கரைசலாக எடுத்தும் வடிகட்டி இதில் சேர்க்கலாம்.
இவை அனைத்தும் நன்கு கொதித்து வந்ததும் அதில் சமைத்து வைத்துள்ள பாசிப்பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும். சுவைக்கு மேலே ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும். இறக்குவதற்கு முன்பாக வாசனைக்கு தேவையான அளவு நெய் சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி ஆகிவிடும்.