வீட்டுல விஷேசமா? இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சு குடுங்க; மனசு நிறைய வாழ்த்துவாங்க: செஃப் வெங்கடேஷ் பட் டிப்ஸ்
வீட்டில் எதாவது விசேஷம் என்றால் என்ன செய்வது என்று நிறைய பேருக்கு தெரியாது. அப்படி இருப்பவர்கள் எல்லாம் வீட்டுக்கு வரும் சொந்தகாரங்களுக்கு செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் ஸ்நாக்ஸ் செய்து அசத்துங்கள்.
வீட்டில் எதாவது விசேஷம் என்றால் என்ன செய்வது என்று நிறைய பேருக்கு தெரியாது. அப்படி இருப்பவர்கள் எல்லாம் வீட்டுக்கு வரும் சொந்தகாரங்களுக்கு செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் ஸ்நாக்ஸ் செய்து அசத்துங்கள்.
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக சம்மர் ஸ்நாக்ஸ் ஆகவும் வீட்டிற்கு வருபவர்களுக்கும் ஒரு ஈவ்னிங் சாட் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
எண்ணெய் கடலை மாவு ஓமம் கருவேப்பிலை சர்க்கரை வள்ளி கிழங்கு பொட்டுக்கடலை மிளகாய் தூள் உப்பு வெங்காயம் தக்காளி மிளகாய் பூண்டு பாதாம் முந்திரிப்பருப்பு வேர்க்கடலை சீரகத்தூள் கருப்பு உப்பு சாட் மசாலா பெருங்காயத்தூள் எலுமிச்சை சாறு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஓமம், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கரைக்கவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு இதனை பிசைய வேண்டும். பின்னர் மேலே எண்ணெய் தடவி ஒரு ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
பின்னர் முறுக்கு ஒலக்கு எடுத்து அதிலிருந்த மாவை போட்டு எண்ணெயில் முறுக்கு மாதிரி பிழிந்து கருவேப்பிலை போட்டு பொரித்து எடுக்கவும். இப்படி தொடர்ச்சியாக அனைத்தையும் பொரித்து எடுத்ததும் சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும்.
அதே எண்ணெயில் சர்க்கரை வள்ளி கிழங்கையும் வறுத்து எடுக்கவும். பின்னர் இதில் பொட்டுக்கடலை பொறித்து எடுக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் பொறித்த அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இதில் மிளகாய் தூள், உப்பு போட்டு அனைத்தையும் கலந்து வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, பாதாம், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, உப்பு, சீரகம், கருப்பு உப்பு, சாட் மசாலா, பெருங்காயத்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து பரிமாறலாம்.