உணவுப் பிரியர்களை கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான டிஷ் எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார். வாயில் நீர் ஊறவைக்கும் இந்த சுட்ட கத்திரிக்காய் மசியல் புளிப்பு, காரம் மற்றும் இனிப்பு கலந்த சுவையில் சூப்பராக இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பெரிய கத்திரிக்காய் நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 4 கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - கொஞ்சம் பச்சை மிளகாய் - 1 தேக்கரண்டி நறுக்கிய வெங்காயம் - 3 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி புளி கரைசல் - 50 கிராம் வெல்லம் - 1 தேக்கரண்டி பெருங்காயம் - ½ தேக்கரண்டி உப்பு கொத்தமல்லி
செய்முறை
Advertisment
Advertisements
ஒரு பெரிய கத்திரிக்காயில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி நெருப்பில் சுடவும். தோல் கருகி, உள்ளே மென்மையாகும் வரை திருப்பி வேகவிட்டு எடுக்கவும். சுட்ட பிறகு, கத்திரிக்காயை தண்ணீரில் மூழ்கடித்து, கருகிய தோலை உரித்து எடுக்கவும். உரித்த கத்திரிக்காயை ஒரு கிண்ணத்தில் நன்றாக மசிக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றை சூடானதும் எண்ணெயில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வெடிக்க விடவும். பின்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, கண்ணாடி போல ஆகும் வரை வதக்கவும்.
இதனுடன் புளி கரைசலை சேர்த்து நன்றாக கலக்கவும். காஷ்மீரி மிளகாய் தூள்,பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.தேவையான அளவு வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். சிறிது தண்ணீர் சேர்த்து, விரும்பிய பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
மசித்த கத்திரிக்காயை கொதிக்கும் கலவையில் சேர்த்து, அனைத்தும் ஒன்றாக கலக்கும் வரை நன்றாக கிளறி, சிறிது நேரம் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான சுட்டா கத்திரிக்காய் மசியல் ரெடி. இந்த மசியலை, சூடான சாதம் மற்றும் அப்பளத்துடன் பரிமாறவும்.