பால் பாயாசத்தை விட பெஸ்ட்... வெறும் 20 நிமிசம் போதும்: செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி
பால் பாயாசத்தை விட பெஸ்டான டேஸ்டியான வெறும் 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு ஒரு டிஷ் அதுவ்ர்ம் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பால் பாயாசத்தை விட பெஸ்டான டேஸ்டியான வெறும் 20 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு ஒரு டிஷ் அதுவ்ர்ம் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
Advertisment
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக எல்லோருக்கும் பிடித்த மாதிரி சேமியா பாயாசம் செஃப் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் எப்படி செய்வது என்று பார்ப்போம். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
சேமியா நெய் பால் சர்க்கரை ஏலக்காய் முந்திரி திராட்சை
செய்முறை
ஒரு கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி சேமியாவை பொன்னிறமாக வறுக்கவும். வறுப்பதால் பாயசத்திற்கு ஒரு தனி சுவையும் மணமும் கிடைக்கும். பின்னர், வறுத்த சேமியாவில் பால் ஊற்றி நன்றாகக் கலக்கி கொதிக்க விடவும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து இனிப்பை சரி செய்து கொள்ளவும்.
பாயசத்திற்கு மேலும் நறுமணம் சேர்க்க ஏலக்காய் சேர்க்கப்படுகிறது. கூடவே, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்தால் பாயசம் மேலும் சுவையாக இருக்கும். அனைத்து பொருட்களையும் சேர்த்த பிறகு, பாயசம் கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.
சுவையான, மணமான சேமியா பாயசம் இப்போது தயார்! இதனை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறலாம். பண்டிகை நாட்களிலும், விசேஷங்களிலும் இந்த எளிய செய்முறையைப் பின்பற்றி நீங்களும் உங்கள் வீட்டில் சேமியா பாயசம் செய்து அனைவரையும் மகிழ்விக்கலாம். இந்த செய்முறை நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.