மிகவும் ஹெல்தியான வாழைத்தண்டை வைத்து சுவையான சட்னி எப்படி செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறி இருப்பது பற்றி பார்ப்போம்.உடல் எடை குறைய வேண்டும், உடலில் கொழுப்பை குறைக்க வேண்டும், நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டும் போன்ற பல விஷயங்களுக்கு வாழைத்தண்டு உதவிக்கிறது. இவ்வளவு நன்மை கொண்ட வாழைத்தண்டில் சட்னி செய்வது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை வாழைத்தண்டு பொட்டுக்கடலை கொத்தமல்லி எண்ணெய் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி தலை தேங்காய் துருவல் உப்பு புளி கடுகு காய்ந்த மிளகாய் உளுந்து கருவேப்பிலை பெருங்காயத்தூள்
செய்முறை
Advertisment
Advertisements
வாழைக்காயை நறுக்கி அதிலுள்ள நார்களை எடுத்துக் கொள்ளவும். இதை தண்ணீரில் போட்டு குச்சியை வைத்து சுற்றி எடுத்தாலே அதில் உள்ள நார்கள் வெளியேறிவிடும்.
இப்போது ஒரு கடாயில் வேர்க்கடலை, கொத்தமல்லி, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறவைத்து பொடி செய்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள வாழைத்தண்டை சேர்த்து வேக விடவும். இதில் உள்ள தண்ணீரிலேயே இதனை வேக விடவும்.
பின்னர் அதில் கொத்தமல்லி தலை, தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும்.
அடி பிடிக்க விடாமல் வேக விட வேண்டும். பின்னர் இறக்கும்போது சிறிது புளியை சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பவுடரோடு வதக்கிய வாழைத்தண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்போது இதனை தாளிப்பதற்காக எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து இந்த சட்னியில் சேர்த்து கலந்து விட்டால் அவ்வளவுதான் இட்லி தோசைக்கு சுவையான வாழைக்காய் சட்னி ரெடி ஆகிவிடும்.