/indian-express-tamil/media/media_files/2025/04/24/EyK7A3H1NwE0AsltHAw0.jpg)
கோடை விடுமுறை விட்டாச்சு இனி பிள்ளைகள் எதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க சொல்லி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். தினமும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதனால் இனி விதவிதமான ஸ்நாக்ஸ் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
அதுவும் பிள்ளைகளுக்கு ஹெல்தியாகவும் கடைகளில் கிடைப்பது போன்றும் செய்து கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள். கேக், முறுக்கு, ஜூஸ், பர்பி என பலவகையான் ஸ்நாக்ஸ் வகைகள் உள்ளது. அதை எல்லாம் செய்வதை விட பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி செய்வது தான் டாஸ்க்.
அப்படியாக சத்து நிறைந்த ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை வைத்து ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்வது என்று வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருக்கிறார்.
கொங்கு நாட்டு ஸ்டைலில் அடை செய்து அதற்கு வல்லாரைக்கீரை துவையல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரிசி
வெங்காயம்
பச்சை மிளகாய்
துவரம் பருப்பு
உப்பு
சீரகம்
வல்லாரை
எண்ணெய்
கடுகு
மிளகாய்
மிளகு
கருவேப்பிலை
கடலைப்பருப்பு
உளுத்தம் பருப்பு
தேங்காய் துருவல்
புளி
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம். பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைத்து ஒரு பவுலில் சேர்க்கவும். அரிசி மற்றும் துவரம் பருப்பு இரண்டையும் தேவையான அளவு ஊறவைத்து வைத்துக் கொள்ளவும். சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் இல்லாமல் அரிசி மற்றும் பருப்பை தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து இதையும் அந்த பவுலில் சேர்க்கவும்.
இரண்டையும் ஒன்றாக கை வைத்து கலந்து விடவும். ஒரு கால் மணி நேரம் ஊற விடவும். பின்னர் எண்ணெயை காய வைத்து அதில் அடையை தட்டி போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்தால் சுவையான கொங்கு அடை தயாராகிவிடும்.
அடுத்ததாக வல்லாரை துவையல் செய்ய ஒரு கடாயில் எண்ணெய், மிளகாய், கடுகு, மிளகு, கருவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.
பின்னர் இவற்றில் சுத்தம் செய்து வைத்துள்ள வல்லாரைக் கீரையை சேர்த்து நன்கு வேகவிடவும். பின்னர் இதில் தேங்காய் துருவல், புளி சேர்த்து ஒரு கிளறு கிளறி ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தேவையான உப்பும் இதற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான் வல்லாரைக் கீரை துவையல் ரெடி ஆகிவிடும். இதோடு பொறித்து வைத்துள்ள அடையையும் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.