சூப்பர் ஈவ்னிங் ஸ்நாக்ஸ்; டீ கடை ரவா வடை; செஃப் வெங்கடேஷ் பட் ரெசிபி

தேநீர் நேரத்தில் சாப்பிட சுடச் சுடச் டீ கடை ரவா வடை செய்வது பற்றி பார்ப்போம்.

தேநீர் நேரத்தில் சாப்பிட சுடச் சுடச் டீ கடை ரவா வடை செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
 Vadai

டீ கடையில் கிடைக்கும் ஃபேமஸ் ரவா வடை ரெசிபி செய்வது பற்றி செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

ரவா - 200 கிராம்
பெரிய வெங்ககாயம்- 3
கொத்தமல்லி 
கறிவேப்பிலை  
சீரகம்
பச்சை மிளகாய்
இஞ்சி
வேர்கடலை 
கெட்டித் தயிர் 
பெருங்காயத் தூள் 
நெய்

செய்முறை

கடாயில் பெரிய வெங்ககாயம் எடுத்து அதில் கொத்தமல்லி, கறிவேப்பிலை, 1 டீஸ்பூன் சீரகம், பச்சை மிளகாய், துருவிய இஞ்சி சேர்த்து கையில் பிசையவும்.  சிறிது நேரம் பிசைந்து ரவா வடைக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்போது வெங்காயம் தண்ணீர் விட்டவும் ரவை மற்றும் 1 கை வேர்கடலை உடைத்து சேர்க்கவும். 

Advertisment
Advertisements

அடுத்தாக அதில் கெட்டித் தயிர் சேர்த்து கலக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும்.  அதன் பின் எடுத்து அதில் 1 ஸ்பூன் நெய், அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

இப்போது ஒரு வாழை இலை எடுத்து நெய் தடவி வடை மாவை எடுத்து வாழை இலை மேல் வைத்து தட்டவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இலையில் இருந்து வடையை எடுத்து போட்டு பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான டீ கடை ரவா வடை ரெடி.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: