உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவது உண்மையே. ஒரு காலத்தில் நன்மை பயக்கும் என்று கருதப்பட்ட பல விஷயங்கள், இன்று வேறு விதமாகப் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், பிரபல செஃப் வெங்கடேஷ் பட் பிஹைண்ட்வுட்ஸ் ஹிட்ஸுக்கு அளித்த பேட்டியில், உடலை சுத்திகரிப்பது குறித்த ஒரு சுவாரஸ்யமான மற்றும் எளிய வழியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Advertisment
அவர் கூறுவது என்னவென்றால், தினமும் மூன்று கிளாஸ் கொதிக்க கொதிக்க சுடுதண்ணீரை டீ குடிப்பது போல அருந்தினால், உடலில் உள்ள பாதி நச்சுக்கள் வெளியேறிவிடும். இது ஒரு எளிய வழி என்றும், உடலை சுத்தப்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.
நாம் உண்ணும் உணவுகள், சுவாசிக்கும் காற்று, மற்றும் சுற்றுச்சூழலிலிருந்து சேரும் நச்சுக்கள் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இந்த நச்சுக்களை வெளியேற்றுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.