இதை சாப்பிடுங்க... 80 வயது வரை முட்டி வலி வராது: வெங்கடேஷ் பட் ரெசிபி
பிரண்டை மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்பது அறியவியலே ஆச்சரியப்படுகிற ஒன்று என்று கூறும் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், பிரண்டை துவையலை சாப்பிட்டால் மூட்டுவலி சரியாகும் என்று கூறுகிறார். மேலும், இந்த பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட், பிரண்டை மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்பது அறியவியலே ஆச்சரியப்படுகிற ஒன்று எனக் கூறுகிறார்.
பிரண்டை மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்பது அறியவியலே ஆச்சரியப்படுகிற ஒன்று என்று கூறும் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், பிரண்டை துவையலை சாப்பிட்டால் மூட்டுவலி சரியாகும் என்று கூறுகிறார். மேலும், இந்த பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று கூறியுள்ளார்.
Advertisment
பிரபல சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட், பிரண்டை மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்பது அறியவியலே ஆச்சரியப்படுகிற ஒன்று எனக் கூறுகிறார். மேலும், வாரத்துக்கு ஒருமுறை பிரண்டை சாப்பிட்டால், உங்கள் முட்டி நன்றாக இருக்கும்போதே பிரண்டையை வாரம் வாரம் சாப்பிட்டால், 80 வயது வரை முட்டி வலி வராது. ஆர்த்தரிட்டிஸ் என்கிற முட்டி வலி வராது என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
மேலும், உடல் எடை காரணமாக தனக்கு முட்டி வலி வந்தபோது, பிரண்டை துவையல் சட்னி மாதிரி செய்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு மாதத்திற்கு 7 - 8 முறைதான் சாப்பிட்டேன். பிரண்டை துவையலை, சாதத்துடன், தோசை, இட்லி உடன் சட்னி மாதிரி பாவித்து சாப்பிட்டேன். காலையில் கஞ்சி இந்த பிரண்டை துவையலை கலந்து சாப்பிட்டேன். இப்படி மாதத்திற்கு 7 - 8 முறை சாப்பிட்டிருப்பேன். முட்டி வலி சுத்தமாகப் போய்விட்டது என்று வெங்கடேஷ் பட் கூறுகிறார். பிரண்டை துவையல் சாப்பிடுவதற்கு முன்பு, தன்னால், காரில் இருந்து காலை எடுத்து வைக்க முடியாது. வலி இருக்கும். கால் வலி வந்த பிரண்டை சாப்பிட ஆரம்பித்தேன் நல்ல பலன் இருந்தது. சிறுவர்களில் இருந்து எல்லோரும் சாப்பிட்டு பழகுங்கள். அந்த மாதிரி மருத்துவ குணம் இருக்கிற விஷயம் பிரண்டை என்று வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
பிரண்டை துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
Advertisment
Advertisements
கொல்லைமேடுகளில், கழனிகாடுகளில் மிக எளிதாகக் கிடைக்கும் பிரண்டையை இளம் பிரண்டையாக எடுத்துக்கொள்ள வேண்டும். பிரண்டையை நார் உரித்து சுத்தம் செய்து நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டவ்வைப் பற்ற வைத்து, அதில் ஒரு கடாயை வையுங்கள். அதில் லேசாக எண்ணெய் விட்டு, ஒரு கைப்பிடி அளவு உளுத்தம்பருப்பு, ஒரு கைப்பிடி துவரம்பருப்பு, அதைவிட கொஞ்சம் குறைவாக கடலைப் பருப்பு போடுங்கள். 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் போடுங்கள். பொன்னிறமாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம் 150 கிராம், 1 தக்காளி நறுக்கியது, காய்ந்த மிளகாய் 4, தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்கள். நன்றாக வதக்கியதும் அதையும் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, கடாயில் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையைப் போடுங்கள் அதனுடன் தேங்காய் துருவல் 1 கப் போடுங்கள் நன்றாக வதக்குங்கள். இப்போது எல்லாவற்றையும் உரலில் போட்டு ஆட்டி எடுத்தால், சுவையான சூப்பரான பிரண்டை துவையல் ரெடி. இந்த பிரண்டை துவையலை சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிடலாம், இட்லி தோசையுடன் சாப்பிடலாம். முட்டி வலி வராமல் தடுக்கலாம்.