மாங்காய் சீசன் ஆரம்பித்து விட்டது. சின்ன மாங்காய் இப்போது எல்லா இடங்களிலுமே கிடைக்கும். அதனை வைத்து எப்படி ஒரு மாவடு செய்வது என்று செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்
பிஞ்சு மாங்காய் உப்பு காய்ந்த மிளகாய் வர மிளகாய் கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்
செய்முறை
Advertisment
Advertisements
தேவையான அளவு வடு மாங்காய் எடுத்து கழுவி கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாமல் எடுத்துக் கொள்ளவும். இதில் வடுமாங்காய் எடுக்கும் அளவிற்கு உப்பு எடுத்து அதில் போட்டு ஊறவிட வேண்டும்.
இதனை ஒரு ஜாரில் போட்டு வைத்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எடுத்து கலந்து விட்டால் போதும் உப்பில் இருக்கும் தண்ணீரே ஊறி சுவையாக இருக்கும். இப்படியாக இந்த வடுமாங்காவை பத்து நாள் ஊறவைத்து கொள்ளவும்.
பின்னர் ஊற வைத்த வடுமாங்காயை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள தண்ணீர் மற்றும் வடுமாங்காயை தனியாக பிரிக்கவும். தண்ணீர் மற்றும் அந்த வடுமாங்காய் தனித்தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
வர மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய், கடுகு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளவும். இதில் பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் எடுத்து அதில் இந்த ஊறவைத்த மாங்காய் தண்ணீரை சேர்த்து கலந்து விடவும்.
மீண்டும் இதனை கைப்படாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அப்போது தான் அனைத்து மசக்கள் தண்ணீரில் கலந்து சுவையாக இருக்கும்.
பின்னர் இதனை அந்த மாங்காயில் போட்டு கைப்படாமல் கலக்கவும். இதனை நன்றாக கலந்து ஒரு கெட்டியான அழுத்தமான பாத்திரத்திலோ டப்பாவிலோ போட்டு மூடி வைத்துவிட்டு ஒரு மாதம் கழித்து எடுத்து சாப்பிடலாம். இந்த வடுமாங்காய் ஒரு வருடம் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். தண்ணீர் மற்றும் கை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் வெங்கடேஷ் பட்.