எவ்வளவு ஈவ்னிங் என்ன சாப்பிட்டாலும் போர் அடித்து விட்டது புதிதாக ஏதாவது ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறீங்களா? அப்போ வெங்கடேஷ் பட் ஸ்டைலில் ஒரு கருப்பு உளுந்து மிளகு வடை செய்து பாருங்கள். உளுந்து உடலுக்கு நன்மை எனவே ஸ்நாக்ஸ் கொஞ்சம் ஹெல்தியாவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து
சீரகம்
மிளகு
உப்பு
பெருங்காயத் தூள்
கடலை எண்ணெய்
செய்முறை
ஒரு கப்பில் கருப்பு உளுந்து எடுத்து சுத்தம் செய்து நன்கு கழுவி 5 மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் சீரகம், மிளகு எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின்னர் ஊறவைத்த உளுந்தில் இருந்து தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். இவை அனைத்தையும் ஒரு பவுலில் மாற்றி ஏற்கெனவே அரைத்த சீரகம், மிளகை இதில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
Venkatesh Bhat makes Milagu Vadai
பின் இதில் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு அனைத்தையும் கலந்து விடவும். பின்னர் கலந்து மாவை வட்டமாக தண்ணீர் தொட்டு தட்டி எண்ணெயில் பொறித்து எடுத்தால் கருப்பு உளுந்து மிளகு வடை ரெடியாகிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“