தேங்காய் பாலில் செய்த டேஸ்டியான டிஷ்... குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க; இப்படி செஞ்சு குடுத்துப் பாருங்க!
கார பணியாரம் இனிப்பு பணியாரம் தெரியும். பால் பணியாரம் தெரியுமா? செஞ்சுரூக்கிங்களா.. பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான ஸ்நாக்ஸ். இன்று பால் பணியாரம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.
கார பணியாரம் இனிப்பு பணியாரம் தெரியும். பால் பணியாரம் தெரியுமா? செஞ்சுரூக்கிங்களா.. பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான ஸ்நாக்ஸ். இன்று பால் பணியாரம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்.
பால் பணியாரம் என்பது செட்டிநாட்டு சமையலில் மிகவும் பிரபலமானதாகும். இது பெரும்பாலும் பிறந்தநாள், ஆண்டுவிழா போன்ற விசேஷ நிகழ்வுகளுக்காக தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இந்தப் பால் பணியாரத்தை எப்படி இலகுவான முறையில் வீட்டிலே சுவையாக செய்யலாம் என இந்தப் பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
1 கப் உளுத்தம் பருப்பு
1 கப் பச்சரிசி
Advertisment
Advertisements
1 1/2 கப் சர்க்கரை(வெல்லம்)
1 தேங்காய்
4 to 6 ஏலக்காய்
1 சிட்டிகை உப்பு
எண்ணெய்(தேவையான அளவு)
செய்முறை:
முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி அதை சுமார் 3 மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும். அடுத்து அதை ஒரு மிக்ஸியில் போட்டு அதனுடன் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து தேவைப்பட்ட அளவு தண்ணீரை சேர்த்து நன்கு அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். பின்பு மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் இருக்கும் மாவை நன்கு அலசி பாத்திரத்தில் இருக்கும் மாவில் ஊற்றி அதை தோசை மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.
இப்பொழுது தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் ஏலக்காயையும் போட்டு அதை நன்கு அரைத்து கொள்ளவும். பின்னர் நாம் அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி தேங்காய் பாலை மட்டும் எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும். அடுத்து அந்த தேங்காய் பாலில் ஒன்றரை கப் அளவு சர்க்கரையோ அல்லது அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு கரையும் வரை ஒரு கரண்டி மூலம் கலக்கி விட்டு சர்க்கரை கரைந்ததும் அதை மீண்டும் ஒரு முறை வடிகட்டி வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பணியாரத்தை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். எண்ணெய் சுட்டதும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் மாவை நம் கைகளின் மூலம் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக கடாயின் அளவிற்கேற்ப போடவும். பின்னர் பணியாரம் ஒரு புறம் வெந்ததும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது வெந்ததும் அதை எடுத்து எண்ணெய்யை கரண்டியின் மூலம் நன்கு வடித்து ஒரு தட்டில் போட்டு வைத்து கொள்ளவும்.
இவ்வாறு மீதமுள்ள மாவையும் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த பணியாரத்தை போட்டு எடுப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தண்ணீரை சுட வைக்கவும்.
தண்ணீர் சுட்டதும் அதில் பொரித்து வைத்திருக்கும் பணியாரத்தை சேர்த்து தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பணியாரத்தை எடுத்து ஒரு வடிகட்டியில் சேர்த்து தண்ணீரை நன்கு வடிய விடவும். தண்ணீர் வடிந்தவுடன் பணியாரத்தை எடுத்து செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலில் போட்டு அதை சுமார் 15 இலிருந்து 20 நிமிடம் வரை ஊற விட்ட பின்பு அதை பரிமாறவும்.
இப்பொழுது சுவையான மற்றும் இனிப்பான பால் பணியாரம் தயார்..!