மாலை நேர தேநீருடன் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டி செய்ய வேண்டுமா அப்போ இந்த சீயத்தை ட்ரை பண்ணுங்கள். சசிகுக்ஸ் யூடியூப் பக்கத்தில் செட்டிநாடு மசாலா சீயம் எப்படி செய்வது என்று செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்: உளுந்து - 1 சிறிய டம்ளர் பச்சரிசி - 1 சிறிய டம்ளர் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - ஒரு துண்டு கறிவேப்பிலை தேங்காய் துருவல் அல்லது பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் கடுகு உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு பொடி உப்பு - ½ தேக்கரண்டி எண்ணெய்
செய்முறை:
ஒரு சிறிய டம்ளர் உளுந்து மற்றும் அதே அளவு பச்சரிசியை எடுத்து நன்றாகக் கழுவி, சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். நன்றாக ஊறியதும், தண்ணீரை வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் (அளவு அதிகமாக இருந்தால் கிரைண்டரில்) சேர்க்கவும். அளவாக தண்ணீர் ஊற்றி, நைஸாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவு நீர்த்துப் போனால் எண்ணெய் அதிகமாக இழுக்கும்.
Advertisment
Advertisements
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மற்றும் கறிவேப்பிலையை எடுத்து வைத்துக் கொள்ளவும். இவற்றை நேரடியாக மாவுடன் சேர்க்கலாம். ஆனால், சிறிது வதக்கி சேர்ப்பது இன்னும் சுவையாக இருக்கும். இரண்டு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பிறகு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது வதக்கவும்.
இத்துடன் தேங்காய் துருவல் அல்லது நறுக்கிய தேங்காய் துண்டுகள் சேர்க்கவும். அரை ஸ்பூன் அளவுக்குப் பொடி உப்பைச் சேர்க்கவும். வதக்கிய மசாலா கலவை ஆறியதும், அரைத்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, மாவை போண்டா அல்லது வடை போல் கைகளில் எடுத்து மெதுவாக எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கம் திருப்பிப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். மாவு கெட்டியாக அரைக்கப்பட்டதால், எண்ணெய் அதிகம் இழுக்காது. சூடான செட்டிநாடு மசாலா சீயத்தை, தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் பரிமாறலாம். வெளியே மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும், உளுந்து வடை சுவையுடன் இது ஒரு அருமையான சிற்றுண்டியாக இருக்கும்.