அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் காளான் ஆகும். அதில் பல வகியான உணவுகளை அசைவ உணவு சுவையில் செய்யலாம்.
அந்த வகையில் சப்பாத்தி முதல் சுடு சாதம் வரை அனைத்து உணவிற்கும் ஏற்ற சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் காளான் தொக்கு ரெசிபியை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காளான்
பெரிய வெங்காயம்
தக்காளி
உப்பு
கொத்தமல்லி தூள்
மிளகு
சீரகம்
பெருஞ்சீரகம்
காய்ந்த மிளகாய்
பூண்டு
எண்ணெய்
பட்டை
லவங்கம்
நீங்கள் எப்போதும் வீட்டில் சமைக்கும் அளவு முறையையே இதற்கும் பயன்படுத்தலாம்.
செய்முறை
காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து நீளமாக நறுக்கி வைக்கவும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடிப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி தூள், மிளகு,சீரகம்,பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வாசம் வரும் வரை வறுத்து, சூடு ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதக்கவும். அத்துடன் நறுக்கிய காளானைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு வேக விடவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள கலவையைப்போட்டு 3 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான காளான் தொக்கு ரெடியாகிவிடும். இதனை சப்பாத்தி, பூரி மற்ற்ம் சூடான சாதத்தில் வைத்தும் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“