செட்டிநாடு ஸ்டைல் காளான் கிரேவி செய்வது பற்றி பார்ப்போம். இது சிக்கன், மட்டன் கிரேவியை விட சுவையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்திக்கு சாப்பிடுங்க.
தேவையான பொருட்கள்
காளான் – 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் – 1
சீரகம்- 1/2 ஸ்பூன்
எண்ணெய், கொத்தமல்லி- தேவையான அளவு
அரைக்க
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 10- 15
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 2
அன்னாசிப்பூ – 2
பட்டை – 2
கிராம்பு – 2
வதக்க தேவையானவை
சின்னவெங்காயம் – 1 கப்
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பற்கள்
செய்முறை
முதலில் தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி தனியாக வைக்கவும், இது ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும்.
அடுத்து கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இதன் மசாலா வாசனை போனதும் அரைத்த மசாலா, உப்பு சேர்க்கவும்.
மசாலா நன்கு கொதித்ததும் நறுக்கிய காளானை சேர்த்து தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும். குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி விடவும். சுவை அள்ளும் செட்டிநாடு ஸ்டைல் காளான் கிரேவி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“