இனிப்பு பொங்கல் என்று கூறப்படும் செட்டிநாடு ஸ்பெஷல் ஸ்வீட் உக்காரையை வீட்டில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு- 125 கிராம்
ரவை - 2 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 1/2 டீஸ்பூன்
நாட்டுச் சர்க்கரை - சுவைக்க
துருவிய தேங்காய் - 4 டீஸ்பூன்
நெய் - 5 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
பாதாம் (விரும்பினால்) - 5 எண்கள்
செய்முறை
ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி மீடியம் ஃபிளேமில் வைத்து பாசி பருப்பை வறுக்க வேண்டும். இதைத்தொடர்ந்து இதில் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவை, அரிசி மாவு சேர்த்து வதக்கி அதில் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பின்னர் தண்ணீர் உற்றி கொட்டியான பதத்தில் வர வேண்டும்.
செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரா ஸ்வீட் | Chettinad Ukkarai Recipe | CDK 554 | Chef Deena's Kitchen
பதம் வந்ததும் அதில் வேகவைத்த பருப்பு மற்றும் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி விடவும். தயார் செய்து இறக்குவதற்கு முன் பாதாம் சேர்த்து கிளறி இறக்கி பரிமாற ஆரம்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“