கிராம்பு ஒருவகையான வாசனை மற்றும் மசாலா பொருள் ஆகும். இறைச்சி, பேக்கரி பொருட்கள், சூப், பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்தப்படும். மறுபுறம், கிராம்பு எண்ணெய் வலி நிவாரணம், செரிமான பிரச்சனைகள் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்கு உதவுதல் போன்ற மருத்துவ நோக்கங்களுக்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு மரத்தின் பல்வேறு பாகங்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பின் நன்மைகள் குறித்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
தினமும் காலை வெறும் வயிற்றில் கிராம்பு சாப்பிடுவது பலவித உடல் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது, பல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்,
கல்லீரல் ஆரோக்கியம் (Liver health)
கிராம்பு ஹெபடோ-பாதுகாப்பு விளைவைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது புதிய செல் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
வெறும் வயிற்றில் ஒரு சிட்டிகை கிராம்பு பொடி உட்கொள்வது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிடலாம். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது மற்றும் பீட்டா செல் செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர் அரூஷி கார்க் கூறினார்.
பல் ஆரோக்கியம்
பல் வலி நிவாரணியாக கிராம்பு காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனுடன் வாய் அழற்சி, ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றத்தை எதிர்க்கிறது.
காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறந்தது. புத்துணர்ச்சியடையச் செய்கிறது. கிராம்பின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நாள் முழுவதும் வாய் ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் உறுதி செய்கிறது.
செரிமான பிரச்சனைக்கு தீர்வு
கிராம்பு அதன் சூடான போக்கு காரணமாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
கிராம்பு செரிமான சுரப்பிகளை மேம்படுத்தி வயிறு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இருப்பினும், கிராம்பை அதிகமாக உட்கொள்ள கூடாது. அதிகமாக உட்கொள்ளவது ரத்தம் உறைதலை மெதுவாக்குகிறது. வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என நிபுணர் கார்க் எச்சரிக்கிறார்.
கிராம்புகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை குடலில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றன. இது சிறந்த குடல் ஆரோக்கியம், செரிமானம் மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துகிறது.