புரோட்டீன் நமது சதைகள் மற்றும் தசைகளின் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. அதேவேளையில் உடல் எடை குறைக்கவும் இது உதவுகிறது. குறிப்பாக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
அதிக புரத சத்து, பசியை தூண்டும் ஹார்மோன்களின் அளவை குறைக்கிறது. இதனால் அதிகம் சாப்பிட மாட்டோம். நாம் அதிக புரத சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும்போதும், அதை உடல் அமினோ ஆசிட்டாக மாற்றுகிறது. இது நமது திசுக்களை வளர்க்கவும், சேதமடைதால் அதை சரி செய்யவும் உதவுகிறது.
நமது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன், இன்சுலின் ஆகியவை சரியாக வேலை செய்ய அமினோ ஆசிட்ஸ் உதவுகிறது.
ஒருவர் எவ்வளவு புரோட்டீனை ஒரு நாளைக்கு எடுத்துகொள்ள வேண்டும் ?
அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யும் நபர்கள் 65 வயதுக்குள் இருப்பவர்கள். ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் என்று உங்கள் உடல் எடை எவ்வளவு இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான நபர்கள் 1.0 முதல் 2.0 கிராம் ( ஒரு கிலோவிற்கு ). அதுபோல் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 1.3 கிராம் முதல் 2.0 கிராம் வரை( ஒரு கிலோவிற்கு) எடுத்துக்கொள்ளலாம் .
புரோட்டீன் நிறைந்த உணவுகள்
பருப்பு வகைகள்: இதில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் அதிக நார்சத்தும் உள்ளது. இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளதால், உடல் எடை குறைக்க உதவுகிறது.
தயிர்: இதில் புரத சத்து மற்றும் ப்ரோபயாடிக்ஸ் இருக்கிறது. குடலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை குறைக்க உதவும்.
முட்டைகள்: அதில் அதிக புரத சத்து இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் டி இருக்கிறது.இதனால் நமது எலும்பு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதில் கலோரிகள் குறைவாக இருக்கிறது.
சிக்கன் மற்றும் மீன்: அசைவம் தேர்வு செய்யும் நபர்களுக்கு மீன் மற்றும் சிக்கனில் புரத சத்து அதிகமாக உள்ளது. மீனில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இருக்கிறது.