scorecardresearch

ஒரு முறை வச்சா மீண்டும் மீண்டும் கேப்பாங்க: அப்படி ஒரு அசத்தலான கொண்டக்கடலை  குழும்பு

வழக்கமான குழம்புபோல் இல்லாமல், இது ஒரு சூப்பர் சுவையாக இருக்கும். இந்த கொண்டக்கடலை குழம்பு ஒரு முறை செய்து பாருங்க .

அப்படி ஒரு அசத்தலான கொண்டக்கடலை குழும்பு
அப்படி ஒரு அசத்தலான கொண்டக்கடலை குழும்பு

வழக்கமான குழம்புபோல் இல்லாமல், இது ஒரு சூப்பர் சுவையாக இருக்கும். இந்த கொண்டக்கடலை குழம்பு ஒரு முறை செய்து பாருங்க.

தேவையான பொருட்கள்

கொண்டக் கடலை

உப்பு

மிளகாய் பொடி

மல்லி பொடி

சீரகப் பொடி

கத்திரிக்காய்

உருளைகிழங்கு

வெந்தயம்

கடுகு

சின்ன வெங்காயம்

பெரிய வெங்காயம்

எண்ணெய்

புலி கரைத்தது

கொத்தமல்லி

தேங்காய்

சீரகம்

செய்முறை : கடாய் சூடானதும், வெந்தயம் சேர்க்கவும், தொடர்ந்து கடுகு போடவும். இரண்டும் நன்றாக பொறிந்தவுடன், 10 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்க்க வேண்டும். தொடர்ந்து வதக்க வேண்டும். பூண்டை சேர்க்கவும். தொடர்ந்து இதை 2 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். பொடியாக  நறுக்கிய பெரிய வெங்காயத்தை அடுத்ததாக சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய தக்காளி சேர்க்க வேண்டும். இதை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு கத்திரிக்காய் நறுக்கியதை சேர்த்து  வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய உருளைகிழங்கை சேர்க்க வேண்டும். 1 ½ ஸ்பூன் மிளகாய் பொடி, 2 ஸ்பூன் மல்லிதூள், சிரகத்தூள், சேர்க்கவும்.  தொடர்ந்து அவித்த கொண்டக்கடலையை சேர்க்கவும். தொடர்ந்து வதக்க வேண்டும். தொடர்ந்து புலி கரைத்ததை சேர்க்கவும். தொடர்ந்து உப்பு சேர்த்து கொத்தமல்லி சேர்க்கவும். தொடர்ந்து தேங்காய், சீரகம் அரைத்ததை சேர்க்கவும். 3 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Chick pea kulampu recipe

Best of Express