மொறுமொறு சிக்கன் 65... செஃப் தாமு ஸ்டைலில்... இப்படி செஞ்சு அசத்துங்க!
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் சமூக வலைதளங்களிலும் தாமு மிகவும் பிரபலமானவராக வலம் வரும் செஃப் தாமு ஸ்டைலில் சிக்கன் 65 மொறுமொறுப்பாக எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
இந்தியாவின் பிரபலமான சமையல் கலைஞர்களில் ஒருவராக அறியப்படுபவர் செஃப் தாமு. அவரது உண்மையான பெயர் கோதண்டராமன் தாமோதரன். உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள தாமு இத்துறையில் அவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். தவிர பல்வேறு விருதுகளை தாமு பெற்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.
Advertisment
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராகப் பங்கேற்றதன் மூலம் சமூக வலைதளங்களிலும் தாமு மிகவும் பிரபலமானவராக வலம் வருகிறார். அந்த வகையில், செஃப் தாமு ஸ்டைலில் சிக்கன் 65 மொறுமொறுப்பாக எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ அரிசி மாவு - ஒரு கை பிடி (25 கிராம்) மைதா - ஒரு கைப்பிடி (25 கிராம்) , மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி, எண்ணெய் எலுமிச்சை 1 கருவேப்பில்லை உப்பு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 1/2 கிலோ சிக்கனை போட்டு நன்கு கழுவி சுத்தமாக எடுத்துக்கொள்ளவும். பிறகு அதே பாத்திரத்தில் சிக்கனை போட்டு, அதனுடன் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, அரிசி மாவு, மைதா மாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பிறகு அவற்றை நன்றாக கலந்து கொள்ளவும். கலக்கும் போது தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு தெளித்து கலந்து கொள்ளவும். இதன்பின்னர், அவற்றை அப்படியே உலர வைக்கவும்.
இதற்கிடையில், ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் கொதித்த பிறகு கலந்து வைத்திருக்கும் சிக்கனை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நனறாக வேக வைக்கவும். அவை வெந்த பின்னர் கருவேப்பிலை அவற்றின் மேல் தூவி சிக்கனை வெளியே எடுக்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மொறுமொறுமான சிக்கன் 65 தயார். இவற்றை உங்களுக்கு பிடித்து உணவுகளுடன் சேர்த்து ருசிக்கலாம். நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் மக்களே!!!