TASTE ATLAS வெளியிட்டுள்ள உலகின் டாப் 10 வறுத்த சிக்கன் உணவுகளில், தமிழ்நாட்டில் உருவான 'சிக்கன் 65', 3ம் இடம் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் தென்கொரியாவின் 'சிக்கின்' முதலிடத்தில் உள்ளது
சிக்கனை வறுத்து சாப்பிடும் பழக்கம் உலகின் பல பகுதிகளில் உள்ளது. ஆனால், ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரி வறுத்து, அதற்கென விதவிதமாக மசாலாக்களுடன் தயார் செய்து சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், Taste Atlas என்ற உணவு மற்றும் பயண வழிகாட்டி நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ளதின் படி, டாப் 10 பட்டியலில் இந்தியாவின் ஒரு உணவு இடம்பெற்றுள்ளது.
அதாவது, உலகம் முழுவதும் சிறந்த வறுத்த சிக்கன் உணவுகளின் டாப் 10 பட்டியலில் 'சிக்கன் 65' மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“