சுவையான சிக்கன் 65 செய்வது எப்படி என்பது பற்றி பாலாஜி’ஸ் கிச்சன் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். மசாலா தடவுவதற்கு முன் சிக்கன் துண்டுகளில் ஈரப்பதம் இல்லாமல் நன்றாக உலர வைக்கவும். அதிகப்படியான ஈரப்பதம் மசாலா சரியாக ஒட்டாமல் போக காரணமாக இருக்கலாம்.
Advertisment
தேவையான பொருட்கள்
சிக்கன் தயிர் இஞ்சி பூண்டு பேஸ்ட் 65 மசாலா கார்ன்ஃப்ளவர் மாவு கருவேப்பிலை எண்ணெய் உப்பு
செய்முறை
Advertisment
Advertisements
சிக்கனை முதலில் தயிரில் பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், சிக்கன் மசாலா போட்டு பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் கார்ன்பிளவர் மாவு, உப்பு போட்டு தண்ணீர் தெளித்து பிரட்டி ஊறவைத்து எண்ணெயில் போட்டு எடுத்தால் அவ்வளவு தான் சுவையான சிக்கன் 65 தயார்.
சிக்கன் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்தால் மசாலா நன்றாக ஊறி சுவையாக இருக்கும். பொரித்த சிக்கனை மேலும் சுவையாக்க, சிறிதளவு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி எலுமிச்சை சாறுடன் பரிமாறலாம். காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம். மொறுமொறுப்பு தன்மைக்கு அரிசி மாவு சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.