சிக்கன் குழம்பு வைச்சு மாதம்பட்டி ரங்கராஜ் செய்த ஸ்பெஷல் ப்ரைட் ரைஸ் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
சிக்கன் குழம்பு - 2 கப்
வேக சாதம் – 1 ½ கப்
முட்டை – 2
3 ஸ்பூன் எண்ணெய்
அரை ஸ்பூன் மிளகு பொடி
கொஞ்சம் உப்பு
செய்முறை : நாம் சிக்கன் குழம்பு செய்யும்போது அதிலிருந்து 2 கப் குழம்பை எடுத்து வைத்துகொள்ளங்கள். ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் முட்டையை ஊற்றி, மிளகு தூள், உப்பு சேர்த்து கிளரவும். மீண்டும் ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சிக்கன் குழம்பு சேர்க்கவும். தொடர்ந்து அவித்த சாதத்தை சேர்க்கவும். இதில் நாம் முட்டையை கிளறி வைத்ததை சேர்த்து கிண்ட வேண்டும்.
சிக்கன் குழம்பு செய்ய : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் சிக்கன் குழம்பு: ஒரு சட்டி குழம்பு முழுக்க காலி பண்ணிடுவீங்க