சமையல் என்பது எல்லோருக்கும் பிடிக்கும். சிலருக்கு சாப்பிட பிடிக்கும் சிலருக்கு சமைக்க பிடிக்கும். ஆனால் இறுதியாக அனைவருக்கும் சமையல் பிடித்து விடும். நம்மில் நிறைய பேருக்கு ருசியான புதுபுது உணவுகளை தேடி சாப்பிடுவது என்பது இருக்கும். நிறைய கடைகள் நிறைய ஊர்களில் இருக்கும் உணவுகளை சுவைக்க தோன்றும்.
Advertisment
அப்படியாக உணவு மீது அதீத காதல் கொண்டவர்கள் தான் இங்கு அதிகம் இருப்பார்கள். அவர்களில் பலர் இப்போது புதுசு புதுசான உணவுகளை எப்படி சமைப்பது என்று தேடி பிடித்து சமைத்து சாப்பிடுகின்றனர். அப்படியாக நாம் உணவுகளை எடுத்தோம் என்றால் எல்லாம் நமக்கு சமைக்க தெரிந்த உணவுகளாக தான் இருக்கும் ஆனால் அதனை எப்படி சுவையாக சமைப்பது என்று தான் நமக்கு தெரியாது.
சண்டே ஸ்பெஷலாக எப்பவும் போல சிக்கன் செய்யாமல் கொஞ்சம் டிப்ரண்டாக சிக்கனை வைத்து இப்படி ஒரு டிஷ் செய்து கொடுங்கள். ஜூஸியாகவும் சாஃப்டாகவும் இருக்கும் சிக்கன் டிஷ் எப்படி செய்வது என்று அம்மா சமையல் வீடியோஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
இஞ்சி பூண்டு கருவேப்பிலை சிக்கன் மிளகாய்த்தூள் சீரகத்தூள் மஞ்சள் தூள் உப்பு தயிர் எலுமிச்சை சாறு முட்டை மைதா மாவு கான்ஃபிளவர் மாவு ரவை மிளகுத்தூள் காய்ந்த மிளகாய் விதை தக்காளி சாஸ் சோயா சாஸ் சர்க்கரை பச்சை மிளகாய் கொத்தமல்லி தழை
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பவுலில் சிக்கன், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்பு தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர் அரைத்து வைத்த பேஸ்ட் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து கலந்து ஊற வைக்கவும்.
பின்னர் இன்னொரு பவுலில் முட்டை, மைதா மாவு, கான்ஃபிளவர் மாவு, ரவை, மிளகுத்தூள், தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். அடுத்ததாக இதனை சிக்கனுடன் சேர்த்து கலந்து விடவும் அதில் சிறிது காய்ந்த மிளகாய் விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது ஒரு பவுலில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து கலந்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் அதில் இந்த சிக்கன் பீஸ்களை பொறித்து எடுக்கவும்.
ஒரு கடாயில் சிக்கன் பொரித்த அதே எண்ணையை சேர்த்து அதில் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்க்கவும். அடுத்ததாக இதில் கலந்து வைத்துள்ள சாசை சேர்த்து ஜெல் மாதிரி வந்ததும் அதில் பொருத்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து பிரட்டி விடவும். சாஸ் சிக்கனோட நன்றாக ஒட்டி வரும்போது மேலே கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கி பரிமாறலாம். சுவையாக இருக்கும்.